தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்கப் படையை குறிவைத்து ஈராக்கில் ராக்கெட் தாக்குதல் - அல் ஆசாத் விமானத் தளத்தில் ராக்கெட் தாக்குதல்

ஈராக்கில் உள்ள விமானத் தளத்தில் அமெரிக்கப் படையை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

Baghdad airport
Baghdad airport

By

Published : May 24, 2021, 10:57 PM IST

மேற்கு ஈராக் பகுதியில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ள அல் ஆசாத் விமானத் தளத்தில் இன்று(மே 24) ராக்கெட் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் அமெரிக்க பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கர்னல் வெய்ன் மார்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதற்கட்ட விசாரணையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாகவும், பாதிப்பு குறித்த முழுமையான விவரம் நாளை தெரியவரும் எனவும் அவர் கூறியுள்ளார். ஈராக்கில் உள்ள கிளர்ச்சிப் படைக்கு எதிராக அமெரிக்காவின் முந்தைய அதிபர் ட்ரம்பின் அரசு தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டுவந்த நிலையில், புதிதாக பதவியேற்ற ஜோ பைடன் அரசும் அந்நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.

இதையும் படிங்க:காங்கோவில் வெடித்து சிதறிய எரிமலை... பொங்கும் லாவா குழம்பு!

ABOUT THE AUTHOR

...view details