தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'உண்மையாகவா..?' - அமெரிக்காவை கிண்டலடித்த ஈரான் அமைச்சர்!

தெஹ்ரான்: ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை அந்நாடு மீறியதாக அமெரிக்க வெளியிட்டிருந்த கண்டன அறிக்கையை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெவத் ஜாரிப் தனது ட்விட்டரல் கிண்டலடித்துள்ளார்.

javad

By

Published : Jul 3, 2019, 4:38 PM IST

ஈரான் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில், ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் நிலவிவருகிறது.

இந்நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தை மீறும் வகையில் 300 கிலோவுக்கும் அதிகமாக யுரேனியத்தை ஈரான் சேமித்துள்ளதாக, அந்நாட்டு அரசு ஊடகம் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 1ஆம் தேதி) செய்தி வெளியிட்டிருந்தது. இதனைக் கடுமையாக கண்டித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையை நகைக்கும் வகையில், "உண்மையாகவா..?" என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் மொஹமத் ஜாவத் ஜரிப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அப்பதிவுடன் வெள்ளை மாளிகை வெளியிட்டிருந்து அறிக்கையையும் சேர்த்திருந்தார்.

மேலும் அவர் பதிவிட்டிருந்த இன்னொரு ட்வீட்டர் பக்கத்தில், 'அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் மீறவில்லை' என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details