கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பயணத்தில் அந்நாட்டு அரசர் முகமது பின் சல்மானுடன் சிறப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஏதேனும் கேள்வி எழுப்பப்படுமா எனச் சர்வதேச அரங்கே உற்றுநோக்கிய நிலையில், இவ்விவகாரம் குறித்து அந்நாடு இந்தியாவுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இந்தியாவில் நடைபெறுவது அதன் உள்நாட்டு விவகாரம் எனத் தெரிவித்துள்ள சவுதி அரசு, காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் சர்வதேச நாடுகளுக்கு விடுத்த கோரிக்கையை தாங்கள் நிராகரித்துள்ளதை சவுதி அரேபியா உறுதிப்படுத்தியுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்கள் குறித்து, இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்ட நிலையில் அந்தந்த நாட்டின் இறையாண்மையில் தலையிடாத வகையில் வெளியுறவுக் கொள்கை உறுதிப்படுத்தப்படும் என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
இதையும் பாருங்க: ஐஎஸ் தலைவன் கொலை, தாக்குதல் வீடியோவை வெளியிட்ட அமெரிக்க ராணுவம்!
'டாவோஸ் இன் டெசர்ட்' என்று கூறப்படும் மூன்றாவது 'எதிர்கால முதலீடு முன்னெடுப்பு நடவடிக்கை' மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராக உரையாற்றிய நரேந்திர மோடி, இந்தியப் பொருளாதார வளர்ச்சி, நீண்ட கால பொருளாதார செயல்திட்டங்கள், நிதிச்சந்தைகள், தற்காலப் பொருளாதார நகர்வுகள் குறித்து விவாதித்தார்.
சவுதி அரேபிய அரசரான முகமது பின் சல்மான் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் துணை பிரதமரான பொறுப்புகளை வைத்துக்கொண்டு அந்நாட்டு அரசின் பிரதான முகமாகவும் திகழ்ந்துவருகிறார். அவரின் எண்ணத்தின்படியே இந்தியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளைத் தனது கூட்டுறவு சக்தியாக தன்னுடன் சவுதி அரேபியா இணைத்துக்கொண்டது.