தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'காஷ்மீர் நிலைப்பாட்டை புரிந்துகொண்டதாலேயே சவுதி மவுனம் காக்கிறது' - Saudi silence on Kashmir

காஷ்மீர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவாக புரிந்துகொண்டதன் காரணமாகவே அப்பிரச்னை குறித்து சவுதி அரசு மவுனம் காப்பதாக அரசு உயர் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

sharma

By

Published : Nov 4, 2019, 7:15 AM IST

Updated : Nov 4, 2019, 7:43 AM IST

அரசுமுறைப் பயணமாக கடந்த வாரம் சவுதி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் ஜம்மு-காஷ்மீர் பிரச்னை இடம்பெறவில்லை. இதன்மூலம், 'இந்தியா (காஷ்மீர் தொடர்பாக)மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அதன் உள்நாட்டுப் பிரச்னை' என சவுதி அரசு மறைமுறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளதாக இந்திய உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.

காஷ்மீரில் 370 சிறப்புத் தகுதி நீக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவியது. ஆனால் அந்நேரத்தில் இந்தியாவுக்கு எதிராக சவுதி அரேபியா வாய் திறக்கவில்லை.காஷ்மீர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவாகப் புரிந்துகொண்டதே சவுதி அரேபியாவின் மவுனத்துக்குக் காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் வாசிங்க : சவுதி அரேபியாவை வியூகம் அமைத்து வெற்றிகண்ட இந்தியா

இந்தியத் தூதர் சிக்ரூர் ரஹ்மான் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில்,

"தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து வெளியான கூட்டறிக்கையில், 'இருதரப்பினருக்கும் பொதுவான பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், உள்நாட்டுப் பிரச்னைகளில் அயல்நாடுகளின் அனைத்துவிதமான தலையீடுகளையும் கண்டிப்புடன் நிராகரித்துவிட்டனர்' எனக் கூறப்பட்டிருந்தது.

முன்னாள் இந்தியத் தூதர் ஸிக்ரூர் ரஹ்மான் ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி

இதுதவிர பிரதமர் மோடி பயணத்தின் விளைவாக, சவுதி முன்னெடுத்துவரும் வியூக ஒத்துழைப்பு மாநாட்டில் (Strategic Partnership Council) இந்தியா தன்னை இணைத்துக்கொண்டது. இங்கிலாந்து, ஃபிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இதில் இணைந்துகொள்ளும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

பயங்கரவாதம், சைபர் குற்றங்களை ஒடுக்குவதில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்த மாநாடு உதவும்" எனத் தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மா எடுத்த சிறப்புப் பேட்டியின் தமிழாக்கம்

Last Updated : Nov 4, 2019, 7:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details