ஏமனில் ஹவுதி என்னும் கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி - ஏமன் நேசப்படைக்கும் இடையே தொடர் தாக்குதல் நடைபெற்றுவருகிறது. இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் அத்தியாவசியத் தேவைகள் ஏதும் கிடைக்காமல் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கிடையே தலைநகர் சனாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
ஏமனில் தொடரும் தாக்குதல்: பதற்றம் நீடிப்பு!
சனா: ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் விமானப்படை பாதுகாப்பு தளத்தைக் குறிவைத்து சவுதி - ஏமன் நேசப்படை தாக்குதல் நடத்தியுள்ளதால் பதற்றம் நீடித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களை, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள், ஏமனுடன் இணைந்து மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், தலைநகர் சனாவிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் விமானப்படை பாதுகாப்புத் தளத்தைக் குறிவைத்து, சவுதி - ஏமன் நேசப்படை தாக்குதல் நடத்தியது.
இதனால் அங்குப் பதற்றம் நீடித்துள்ளதோடு, இயல்பு வாழ்க்கை முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள அபா விமான நிலையத்தைக் குறிவைத்து, ஹவுதி படையினர் நடத்தியத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி தரும் வகையில் சவுதி- ஏமன் நேசப்படை பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.