2015ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஆதரவு ஹவுதி எனும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி- ஏமன் நேசப்படை தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் அத்தியாவசிய தேவைகள் ஏதும் கிடைக்காமல் பெரும் இன்னல்களை சந்தித்துவருகின்றனர். இந்த போரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஏமனில் விமான தளத்தை குறிவைத்து வான்வழி தாக்குதல்! - air base
சனா: ஏமனில் சவுதி- ஏமன் நேசப்படை விமான தளத்தை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமனில் விமான தளத்தை குறிவைத்து வான்வழி
தலைநகர் சனா உள்பட வடக்கு ஏமன் பகுதியை ஹவுதி படையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இத்தகைய சூழலில், சனா விமான நிலையம் அதனை ஒட்டியுள்ள விமான தளம் ஆகியவைற்ற குறிவைத்து சவுதி ஏமன் நேசப்படை வான்வழி தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமான தளத்திலிருந்துதான், ஆளில்லா விமானம், ஏவுகணை தாக்குதல் உள்ளிட்டவையை ஹவுதி படை மேற்கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.