ஓ.ஐ.சி., எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில், 57 இஸ்லாமிய நாடுகள் இடம்பெற்று உள்ளன. சவுதி அரேபியா தலைமையிலான இந்த அமைப்பில், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு, பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அந்தவகையில் 'இந்தியாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்' என, ஓ.ஐ.சி.,க்கு பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்தது. இந்தியாவுடன் எண்ணெய் உள்ளிட்ட வர்த்தக உறவு உள்ளதால், இதற்கு சவுதி அரேபியா ஆர்வம் காட்டாமல் இருந்தது. இச்சூழலில், மலேசியாவின் கோலாலம்பூரில், ஓ.ஐ.சி.,யின் மாநாடு, சமீபத்தில் நடந்தது. தனியாக ஒரு இஸ்லாமிய அமைப்பை உருவாக்கும் வகையில், இந்த மாநாடு நடப்பதாக, சவுதி அரேபியா கூறியது. அதையடுத்து, இக்கூட்டத்தை அது புறக்கணித்தது.
குடியுரிமை சட்டம் குறித்து ராதா ரவி சர்ச்சை பேச்சு
பண நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு, சவுதி அரேபியா, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிதியுதவி அளித்து வருகின்றன. சவுதியின் நெருக்கடிக்கு பணிந்து, கோலாலம்பூர் மாநாட்டை, பாகிஸ்தான் புறக்கணித்தது. இந்த வேளையில், சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான், பாகிஸ்தானுகுக்கு ஒரு நாள் பயணமாக சென்றுள்ளார்.
அப்போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷி உள்ளிட்டோரைச் சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க, ஓ.ஐ.சி.,யின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டை நடத்த தயாராக உள்ளதாக, சவுதி அரேபியா கூறியுள்ளது.
சீர்காழியில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் கல்வீச்சு கலவரம்!
இந்த சந்திப்புகளின்போது, இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து, இம்ரான் கான், குரேஷி விளக்கியதாக, பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.