ரஷ்யாவுக்கு துருக்கிக்கும் இடையே சமீபகாலமாக மறைமுக மோதல் நிலவிவருகிறது. மத்திய கிழக்கு நாடான சிரியாவை மையமாகக் கொண்டு இந்த மோதல் தொடர்ச்சியாக நிகழ்ந்துவருகிறது.
சிரிய அரசுக்கு நெருக்கமாக உள்ள ரஷ்யா அங்குள்ள உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கு சிரிய ராணுவத்திற்கு உதவிவருகிறது. இதன் காரணமாக அங்கு போர் அகதிகள் அண்டை நாடான துருக்கி எல்லையில் முகாமிட்டுவருகின்றன.
தங்கள் நாட்டுப் பாதுகாப்புக்கு இது சிக்கலை ஏற்படுத்துகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ள துருக்கி, ரஷ்யாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்தின் துருக்கி செய்தி ஆசிரியர் மஹிர் போஸ்திபே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
துருக்கி நாட்டையும் மக்களையும் அவமதிக்கும்விதமான செய்திகளை வெளியிட்ட குற்றத்திற்காக இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என துருக்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் துருக்கிக்கு எதிராகச் செயல்படும் ரஷ்ய உளவாளி எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் செயல் ரஷ்யாவை சீண்டும்விதமாக உள்ளதால் இருநாட்டு உறவில் மேலும் பாதிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:'தலிபான் தலைவர்களை விரைவில் சந்திக்க உள்ளேன்' - அதிபர் ட்ரம்ப்