ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நேரடி உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஈரான் பாதுகாப்புப் படை தளபதியும், அந்நாட்டு போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள இரண்டு விமான தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடந்தது.