உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கப்போகிற ஈரான் நாட்டின் அணுசக்தி லட்சியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அந்நாட்டுடன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய ஆறு வல்லரசு நாடுகள் 2015ஆம் ஆண்டு 'Joint Comprehenscive Plan of Action' (JCPOA) என்றழைக்கப்படும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன. இதனடிப்படையில், ஈரான் அணுசக்தி ஆயுதங்கள் தயாரிப்பை நிறுத்தக்கொண்டது.
இந்நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முரணாக ஈரான் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்கா, கடந்த 2018ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக விலகியது. மேலும், ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து மற்ற நாடுகளுக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யவிடாமல் அந்நாட்டை பொருளாதார ரீதியாக முடக்கியது.