மத்திய கிழக்கு நாடான சிரியாவில், 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நிலவிவருகிறது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த இந்தப் போரில் சிரியா அரசு, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டு சேர்ந்து கிளர்ச்சியாளர்களை ஒடுக்கிவருகிறது.
இந்நிலையில், இந்தப் போர் குறித்து 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை ஆய்வு மேற்கொண்ட ஐநா, சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் ரஷ்யா இரண்டு வான்வழித் தாக்குதல்கள் மேற்கொண்டதாகவும், அது போர்க்குற்றம் எனக் குற்றம்சாட்டியுள்ளது.