தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 14, 2020, 10:53 PM IST

ETV Bharat / international

விமான விபத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - ஈரான் அதிபர்

தெஹ்ரான்: ஈரானில் நடைபெற்ற விமான விபத்துக்கு காரணமானவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி உறுதியளித்தார்.

Iran President on Plane crash
Iran President on Plane crash

ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து உக்ரைன் தலைநகர் கியிவ் செல்லவிருந்த போயிங் 737 பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் இந்த விபத்தில உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தொடக்கத்தில் ஈரான் கூறிவந்தது. கடந்த வாரம், இந்த விபத்து மனித தவறால் ஏற்பட்டது என்று ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி (Hassan Rouhani) சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஈரான் தொலைக்காட்சியில் பேசிய அதிபர், "இந்த விபத்துக்கு காரணமானவர்கள் எந்த பதவியிலிருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். உயர் அலுவலர்களையும் நிபுணர்களையும் கொண்டு சிறப்பு விசாரணைக் குழுவை நீதிமன்றம் அமைக்கவேண்டும். மொத்த உலகமும் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க: அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாதிகளாக்கும் சட்டம் - ஈரான் அதிபர் ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details