தாக்குதலில் எத்தனை ஏவுகணைகள் ஏவுப்பட்டன, எந்தெந்த பகுதிகளில் தாக்கப்பட்டன என்பது தெளிவாகவில்லை என அமெரிக்க ராணுவ அலுவலர் ஒருவர் தெரிவித்தாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள க்ரீன் ஸோன் பகுதியில் பல்வேறு வெடிசத்தம் கேட்டதாகவும், பிறகு அந்த இடத்தைச் சுற்று விமானங்கள் வட்டமிட்டதாகவும் ஏஎஃப்பி செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க தூதரகம், அதனைச் சுற்றி பணியமர்த்தப்பட்டுள்ள 5000-க்கும் மேற்பட்ட அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் மீது, கடந்த நான்கு மாதங்களில் 19 தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், ஈரான் ஆதரவில் செயல்பட்டு வரும் ஆயுதம் ஏந்தி தீவிரவாதக் கும்பல்களே இவற்றை அரங்கேற்றியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஈராக்கின் கே 1 ராணுவத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரான் பாதுகாப்புப் படை தளபதி காசிம் சுலைமானி, ஹஷீத் அல்-ஷாபி, பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவர் அபி மஹ்தி அல்-முஹான்திஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் அமெரிக்கா, ஈரான், ஈராக் இடையேயான மோதலை அதிகரித்தது. தலைவர்களின் இறப்புக்கு அமெரிக்காவைப் பழிவாங்கியே தீர்வோம் என சூளுரைத்த ஹஷீத் அமைப்பினர், ஈராக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படையினர் வெளியேறுமாறு வலியுறுத்தினர்.
அமெரிக்கப் படையினருக்கு "கவுண்ட் டவுண்" தொடங்கி விட்டதாக ஈரான் ஆதரவில் செயல்பட்டு வரும் ஹராகட் அல்-நுஜாபா என்ற அமைப்பு அறிவித்த சில மணி நேரங்களில், இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்களுக்கு மூளையில் காயம் : அமெரிக்கா அதிர்ச்சி ரிப்போர்ட்