ஈரான் ராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து, அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தளங்களின் மீது புதன்கிழமை (ஜனவரி 8) அதிகாலை ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கூறுகையில், "அமெரிக்காவை இந்த மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து முற்றாக வெளியேற்றுவதே எங்கள் உண்மையான வெற்றி" என்றார்.
மேலும், இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது.