கிரேக்க தீவான சமோஸுக்கும் துருக்கிய கடற்கரைக்கும் இடையே அமைந்துள்ள ஏஜியன் கடலில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 19 பேர் உயிரிழந்தனர். இடிந்துவிழுந்த கட்டடங்களின் இடுபாடுகளில் சிக்கி 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேற்கு துருக்கியின் நகரமான இஸ்மிருக்கு தெற்கே உள்ள செஃபெரிஹிசர் மாவட்டத்தில் ஒரு சிறிய சுனாமி ஏற்பட்டது. அதனைத்தொடந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று இஸ்தான்புல்லை தளமாகக் கொண்டு இயங்கும் கண்டிலி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஹலுக் ஓசனர் தெரிவித்தார்.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் துருக்கியின் மூன்றாவது பெரிய நகரமான இஸ்மிரில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 709 பேர் காயமடைந்துள்ளனர் என்று துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் துருக்கிய மருத்துவ சங்கத்தின் இஸ்மீர் கிளையின் பொதுச்செயலாளரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.