இந்தியாவில் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. பல நாடுகள், தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வரிசையில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் அல்லது நிறுவனங்கள் இந்தியாவுக்கு அளிக்க விரும்பும் மருத்துவ உபகரணங்களை, இலவசமாக கத்தார் ஏர்வேஸ் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
300 டன் மருத்துவ பொருட்களை இலவசமாக இந்தியாவுக்கு அனுப்பும் கத்தார் ஏர்வேஸ்!
டெல்லி: 300 டன் மருத்துவ பொருட்களை பல்வேறு உலகளாவிய சப்ளையர்களிடமிருந்து இலவசமாக இந்தியாவுக்கு அனுப்ப கத்தார் ஏர்வேஸ் முடிவு செய்துள்ளது
கத்தார் ஏர்வேஸ்
இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் வெளியிட்ட அறிக்கையில், " உலகளாவிய சப்ளையர்களிடமிருந்து பெறப்படும் 300 டன் மருத்துவ பொருட்கள், மூன்று சரக்கு விமானங்களில் தோஹாவிலிருந்து இந்தியாவிற்கு இலவசமாகக் கொண்டு செல்லப்படும். அதில், அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:'தொற்று நோய் எதிர்ப்பு பொருட்கள் இந்தியாவிற்கு வழங்கப்படும்' சீனா