தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது! - UAE's highest civilian award zayed

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரக நாட்டின் பட்டத்து இளவரசர் அந்நாட்டின் உயரிய விருதினை பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

prime minister narendra modi conferred zayed

By

Published : Aug 24, 2019, 6:39 PM IST

ஐந்து நாள் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அமீரகம், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லவுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் இரண்டு நாள் பயணத்தை முடித்த அவர், நேற்று அரபு நாடான அபுதாபிக்கு சென்றுள்ளார்.பிரதமர் மோடியை அபுதாபி உயர் அலுவலர்களும், அபுதாபி நிர்வாக விவகார ஆணையத்தின் தலைவர் கல்தூன் கலீஃபா அல் முபாரக்கும் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றனர்.

பின்னர் இன்று, ஐக்கிய அரபு அமீரக நாட்டின் உயரிய விருதான சயீத் விருதினை அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details