மத்தியக் கிழக்கு நாடான லெபனானில் சரிந்துவரும் பொருளாதாரம், டாலருக்கு நிகரான லெபனான் பவுண்டின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று (ஜூன் 11) வீதிகளுக்குப் படையெடுத்த மக்கள் அங்கு பணியிலிருந்து காவல் துறையினர் மீது கற்களையும், பட்டாசுகளையும் வீசியுள்ளனர்.
இதையடுத்து, காவல் துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசி அப்புறப்படுத்த முயன்றனர். தொடர்ந்து, மாறிமாறி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதால் வீதிகள் போர்க்களமாகக் காட்சியளித்தன. இதனிடையே, லெபனான் பவுண்டின் நாணய மதிப்பை மீட்டெடுக்க, சந்தையில் புதிய டாலர் நோட்டுக்களைப் புழக்கத்தில் விட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.