ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுதொடர்பாக ஆஸ்திரேலியா காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், அந்தக் கும்பல் தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின்பேரில், சோதனை நடத்திய காவல் துறையினர், குழந்தைகள் பாதுகாவலர், குழந்தைகளின் கால்பந்து பயிற்சியாளர் உள்ளிட்ட 16 பேரை கைதுசெய்துள்ளனர்.
கிடைத்த தகவலின்படி, இந்தக் கும்பலுக்கு ஆஸ்திரேலியா தவிர அமெரிக்கா, கனடா, ஆசியா, ஐரோப்பா, நியூசிலாந்து நாடுகளுடனான குற்றச்சம்பவங்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதுவரை 45 பாதிப்புக்குள்ளான குழந்தைகளைக் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். அதில், ஒன்றரை வயது குழந்தையும் அடங்கும். இதுதொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையை காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.
இந்தக் கும்பல் தொடர்பான தகவல் சமூக வலைதளங்கள் மூலமாகவே காவல் துறைக்கு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த மிகப்பெரிய குழந்தை பாலியல் வன்கொடுமை கும்பலானது ஆஸ்திரேலியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருவது தெரியவந்துள்ளது