தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'ஐந்து லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமே நம் இலக்கு' - மோடி

மனாமா: அடுத்த ஐந்தாண்டுகளில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தை அடைவதே நம் இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி

By

Published : Aug 25, 2019, 3:09 AM IST

Updated : Aug 25, 2019, 9:32 AM IST

அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தைத் தொடர்ந்து இன்று பஹ்ரைன் நாட்டிற்குச் சென்றார். அங்குள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் பேசிய மோடி, "பஹ்ரைன் நாட்டிற்கு வந்த முதல் இந்திய பிரதமர் என்ற பெறுமையை நான் அடைகிறேன். உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கு கிருஷ்ண ஜன்மோட்சவ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் இருக்கும் உங்கள் உறவினர்களை கேட்டு பார்த்தால் உங்களுக்கு தெரியும், அங்கு சூழ்நிலை மாறியிருப்பது. நீங்கள் அதனை உணர்கிறீர்களா? இந்தியாவின் நம்பிக்கை அதிகரித்துள்ளதா இல்லையா? அடுத்த ஐந்தாண்டுகளில் நம் பொருளாதாரம் இருமடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஐந்து லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமே நம் இலக்கு" என்றார்.

முன்னதாக, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு மோடி அரசு முறை பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Aug 25, 2019, 9:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details