அமெரிக்கா - ஈரான் இடையே நீண்டகாலமாக பதற்றம் நிலவிவரும் சூழலில், கடந்த ஆண்டு யூஎஸ்எஸ் ஃபிராகட் (USS Farragut) என்ற போர்க் கப்பலை அமெரிக்கா அரபிக் கடலில் நிலைநிறுத்தியது.
இந்தப் போர் கப்பல் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரஷ்ய கடற்படையைச் சேர்ந்த போர் கப்பல் ஒன்று அருகே வந்தது. அப்போது, தொடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அந்த ரஷ்யக் கப்பல், யுஎஸ்எஸ் ஃபிராகட்டுக்கு மிக அருகே வந்ததாகவும், நூலிழையில் அந்தக் கப்பல் வழிமாற்றிச் சென்றதால் பெரும் வெடி விபத்து தவிர்க்கப்பட்டதாவும் அமெரிக்க தலைமையகம் தெரிவித்துள்ளது.