மத்திய கிழக்கு நாடான பாலஸ்தீனம், மேற்கு நதிக்கரை எனப்படும் 'வெஸ்ட் பேங்க்', காஸா ஆகிய இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. யூத மக்கள் அதிகம் வசிக்கும் அண்டை நாடான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பெரும் பகுதியை தன்னுடையது என உரிமம் கோரி வருகிறது. இதனிடையே, பாலஸ்தீனத்தின் மேற்கு நதிக்கரையில் இஸ்ரேல் மக்கள் நீண்ட காலமாக குடியேறி வருகின்றனர். இதை ஐநா ஆக்கிரமிப்புகளாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் ஆதரவோடு இஸ்ரேல் மக்கள் குடியேறியுள்ள மேற்கு நதிக்கரை பகுதிகளை அதனோடு இணைத்துக்கொள்ளும் முயற்சியில் இஸ்ரேல் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு அதரவு திரட்டும் நோக்கில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு உலகைத் திசை திருப்பி வருவதாகப் பாலஸ்தீன வெளியுறவுத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.