தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சிரியா உள்நாட்டுப் போர்: இத்லிப் மாகாணத்திலிருந்து 2.30 லட்சம் பேர் வெளியேற்றம் - இத்லிப் ஐநா

தமாஸ்கஸ் : சிரியாவின் இத்லிப் மாகாணத்திலிருந்து கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இரண்டு லட்சத்து 35 ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளதாக ஐநா தகவல் தெரிவித்துள்ளது.

syria idlib mass displacement
syria idlib mass displacement

By

Published : Dec 29, 2019, 11:32 PM IST


சிரியாவில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நிலவிவருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு கூட்டுப் படைகளுக்கும் இடையே நடக்கும் பயங்கர மோதலில் குழந்தைகள் உள்பட இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் ராணுவ உதவியோடி போராடிவரும் சிரியா அரசு, கிளர்ச்சியாளர்களிடமிருந்து பெருவாரியான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இத்லிப் மாணத்தை கைப்பற்றும் நோக்கில் சிரியா-ரஷ்யா கூட்டுப் படைகள் கடந்த வாரம் அங்கு வான்வழித் தாக்குதல்கள் நடத்தின. பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்தத் தாக்குதல்களை அடுத்து அங்கிருந்து ஏராளமானோர் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

இம்மாகாணத்திலிருந்து கடந்த இரண்டு வாரங்களில் சுமார் இரண்டு லட்சத்து 35 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐநா மனித உரிமை முகமை (UN's humanitarian agency - OCHA) வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 12-25 வரையிலான காலகட்டத்தில் இத்லிப் மாகணத்தின் தென் பகுதியில் உள்ள மாரெட் அல்-நுமான் நகரிலிருந்து பெருவாரியான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

ABOUT THE AUTHOR

...view details