மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், அதிபர் மன்சூர் ஹாதிக்கும், ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. இந்த போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏமன் போர்: 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
சானா: கடந்த 24 மணிநேரத்தில் சவுதி அரபியா அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஏமன் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, ஹவுதி கிளர்ச்சிப் படையை சேர்ந்த 60 நபர்களும், 36 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, அவ்வப்போது சவுதி அரேபியா அரசு வான்வழித் தாக்குதல் நடத்துவதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை சார்பில், குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதையும் படிங்க:அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்தியா பயணம்?