தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 4, 2020, 12:30 PM IST

ETV Bharat / international

ட்ரம்பின் மத்திய கிழக்கு திட்டத்தை நிராகரித்தது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு!

மெக்கா: இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னையை தீர்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்துள்ள மத்திய கிழக்கு திட்டத்தை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நிராகரித்துள்ளது.

Organisation of Islamic Cooperation
Organisation of Islamic Cooperation

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக நீடித்துவரும் பிரச்னையை தீர்க்க, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'மத்திய கிழக்கு திட்டம்' என்ற ஒன்றை முன்மொழிந்தார். பிரச்னைக்குரிய பகுதிகளை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இருநாடுகளும் பிரித்துகொள்வது என்றும் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசிலம் தொடரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, பாலஸ்தீனம் தலைமையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து, 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த ஓஐசி அமைப்பு, ட்ரம்பின் மத்திய கிழக்கு திட்டத்தை நிராகரித்துள்ளதாக அறிவித்தது.

பாலஸ்தீன மக்களின் குறைந்தபட்ச உரிமைகளை ட்ரம்பின் இந்த மத்திய கிழக்கு திட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை என்று ஓஐசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க நிர்வாகம் சார்பில் அமைதிக்கான திட்டம் அறிவிக்கப்பட்டவுடன், அதுகுறித்து விவாதிக்க வெளியுறவுச் செயலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓஐசி கூட்டத்தில் பங்கேற்க ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு விசா மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈராக்கில் அதிகரிக்கும் உயிரிழப்பு - மனித உரிமைகள் ஆணையம்

ABOUT THE AUTHOR

...view details