தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தாலிபான்களுடன் பாக். வீரர்கள் இருந்தார்களா - பென்டகன் கூறுவது என்ன? - தாலிபான்கள்

தாலிபான்களுடன் பாகிஸ்தான் வீரர்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என பென்டகன் கூறியுள்ளது.

No evidence to verify whether Pakistan brought in fighters to support Taliban in Afghanistan: Pentagon
தாலிபான்களுடன் பாகிஸ்தான் வீரர்கள் இருந்தார்களா? பென்டகன் கூறுவது என்ன?

By

Published : Sep 4, 2021, 10:57 AM IST

வாஷிங்டன்:ஆப்கானிஸ்தான் அரசுடன் சண்டையிட்ட தாலிபான்களுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் தனது ராணுவ வீரர்களை அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆப்கனின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் தாலிபான்களுடன் இணைந்து அரசுக்கு எதிராகச் சண்டையிட்டுவருவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பியிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பியிருந்தனர். அந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாலிபான்களுடன் இருந்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்றார்.

இதையும் படிங்க:முடிந்தது 20 ஆண்டுகள் அரண்: வெளியேறிய அமெரிக்கப் படை!

ABOUT THE AUTHOR

...view details