தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'அடுத்த அமெரிக்கா அதிபர் ஈரானிடம் சரணடைய வேண்டியிருக்கும்' - அடுத்த அமெரிக்கா அதிபர்

தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் தேர்தல் யார் வெற்றிபெற்று பதவியேற்றாலும், அவர் ஈரானிடம் சரணடைய வேண்டியிருக்கும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி தெரிவித்துள்ளார்.

next-us-president-will-have-to-surrender-to-iran
next-us-president-will-have-to-surrender-to-iran

By

Published : Nov 5, 2020, 6:45 PM IST

உலகம் முழுவதும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வந்த முடிவுகளின்படி ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலையில் இருந்துவருகிறார்.

இன்னும் பல முக்கிய மாகாணங்களின் முடிவுகள் முழுமையாக வெளியிடப்படாமல் உள்ளன. இந்த நிலையில் அடுத்ததாக பதவியேற்கவுள்ள அமெரிக்க அதிபர் குறித்து ஈரான் அதிபர் பேசியுள்ளார்.

அதில், ''அமெரிக்காவின் அதிபர் யார் என்று இன்றோ அல்லது நாளையோ தெரிந்துவிடும். யார் அமெரிக்காவின் அதிபர் என்பது எங்களுக்கு முக்கியமல்ல. யார் ஆட்சியில் அமர்ந்தாலும், அவர் ஈரானிடம் சரணடைய வேண்டியிருக்கும்.

கரோனா வைரஸ் காலத்தில்கூட தடை உத்தரவுகளை இரக்கமின்றி தீவிரப்படுத்தியது. அவர்கள் எந்தவொரு கொள்கைகளுக்கும், மனிதக் கொள்கைகளுக்கும், மனித உரிமைகளுக்கும், சர்வதேச சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கும் உடன்பட மாட்டார்கள்'' என்றார்.

இதையும் படிங்க:'அமெரிக்க அதிபராக ஆட்சி செய்வேன்' - ஜோ பிடன் நம்பிக்கை!

ABOUT THE AUTHOR

...view details