தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 10, 2020, 8:26 PM IST

ETV Bharat / international

ஒன்றுகூடும் எதிர்க்கட்சியினர்...இஸ்ரேல் பிரதமருக்கு புது சிக்கல்

ஜெருசேலம் : ஆட்சி அமைப்பது குறித்து இஸ்ரேல் பெய்ட்னு கட்சியுடனான பேச்சுவார்த்தை சமூகமாக முடிந்ததென அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் பென்னி கான்ஸ் தெரிவித்துள்ளார்.

israel election
Israel election

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் கடந்த ஆண்டு (2019) ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி, முன்னாள் ராணுவத் தளபதி பென்னி கான்ட்ஸ் தலைமையிலான ப்ளூ அண்ட் ஒயிட் கட்சி என எந்தக் கட்சியாலும் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனதால் அங்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரேல் மீண்டும் தேர்தலைத் சந்தித்தது. இந்தத் தேர்தலிலும் பெரும்பான்மை கிடைக்காமல் அரசியல் கட்சிகள் திண்டாடின. இந்தக் சிக்கலுக்கிடையே , பிரதமர் நெதன்யாகு எதிர்க்கட்சியான ப்ளூ அண்ட் வைட்டுடன் கூட்டணி அமைக்கவும் துணிந்தார். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.

தேர்தல் முடிந்து நீண்ட நாள்களாகியும் எந்த அரசியல் கட்சியும் ஆட்சி அமைக்காததால், தொடர்ந்து மூன்றாவது முறையாக இம்மாதம் 2ஆம் தேதி அந்நாட்டில் தேர்தல் நடைபெற்றது.

ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தேர்தலைச் சந்தித்த பிரதமர் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி வெறும் 58 இடங்கள் மட்டும் வெற்றிபெற்று பெரும்பான்மை இலக்கை (61) எட்ட தவறிவிட்டது. அதேபோல், பென்னி கான்ட்ஸ் தலைமயிலான கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதன் காரணமாக இஸ்ரேலில் யார் ஆட்சி அமைப்பார் என்பதில் மீண்டும் குழப்பம் நிலவிவருகிறது.

இந்நிலையில், ஆட்சி அமைப்பது குறித்து இஸ்ரேல் பெய்ட்னு என்ற சிறிய கட்சியுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அது சுமூகமாக முடிவுற்றதெனவும் பென்னி கான்ட்ஸ் தற்போது அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இஸ்ரேலில் நிலவிவரும் குழப்பத்தை களையும் பொருட்டு அவிக்தோர் லைபர்மேனுடன் நான் பேச்சுவார்த்தை மேற்கொண்டேன். இந்தப் பேச்சுவார்த்தையில் ஆட்சி அமைக்க இருவரும் ஒப்புக்கொண்டுள்ளோம். இதன் மூலம் இஸ்ரேல் மீண்டும் தேர்தலைச் சந்திக்கும் சூழல் தவிர்க்கப்படும்" என்றார்.

இந்த அறிவிப்பானது ஆட்சியை தக்க வைக்கப் போராடி வரும் பிரதமர் நென்யாகுவுக்கு புதிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நெதன்யாகுவுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நடைபெற்றுவருவதால், அவர் பிரதமர் பதவியை தக்க வைக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த முறை நெதன்யாகு ஆட்சியமைக்க தவறினால் அவரது அரசியல் வாழ்க்கை அதோகதியாகிவிடும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : கொரோனா பீதி: இந்தியர்கள் பாணியல் வணக்கம் வைத்த பிரிட்டன் இளவரசர்!

ABOUT THE AUTHOR

...view details