தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அடுத்த மூன்று மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி- இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு - இஸ்ரேலில் கரோனா பரவல்

அடுத்த மூன்று மாதத்திற்குள் அனைத்து இஸ்ரேலியர்களுக்கும் கரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியளித்துள்ளார்.

Netanyahu
Netanyahu

By

Published : Jan 10, 2021, 1:25 PM IST

உலக நாடுகள் அனைத்து கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகளை தற்போது தீவிரப்படுத்திவருகின்றன. இந்நிலையில், மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலும் பிபைசர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

அந்நாட்டின் முதல் தடுப்பூசியை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டிசம்பர் 20ஆம் தேதி செலுத்திக்கொண்டார். இந்நிலையில், நேற்று (ஜன 9) அதன் இரண்டாவது டோசையும் செலுத்திக்கொண்டார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அவர், அடுத்த மூன்று மாதத்திற்குள் அனைத்து இஸ்ரேலிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

அதன்பின்னர், நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு மீண்டுவரும் என்றார். இதுவரை, அந்நாட்டில் நான்கு லட்சத்து 85 ஆயிரத்து 434 கோவிட் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மூன்றாயிரத்து 645 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:அமெரிக்கா, இங்கிலாந்து தடுப்பூசிகளுக்குத் தடை - ஈரான் மதகுரு அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details