தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்கா ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம் - இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம்: மேற்கு கடற்கரைப் பகுதி எனப்படும் வெஸ்ட் பேங்க் பகுதியை இஸ்ரேலின் அங்கமாக அமெரிக்கா அறிவிக்கும் என நம்புவதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

benjamin
benjamin

By

Published : Apr 27, 2020, 2:09 PM IST

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவிவருகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'மத்திய கிழக்குத் திட்டம்' என்ற அமைதி திட்டத்தை அண்மையில் அறிவித்தார்.

மத்திய கிழக்குத் திட்டம் என்றால் என்ன?

ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்படும், அதே சமயம் 1967ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீன தலைநகராக அறிவிக்கப்படும், பாலஸ்தீனம் சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ளப்படும், திட்டத்தின்கீழ் பாலஸ்தீனத்திற்கு ஒதுக்கப்பட்ட புதிய பகுதிகளில் நான்கு ஆண்டுகள் வரை இஸ்ரேலியர்கள் (யூதர்கள்) யாரும் குடியேறக் கூடாது என்பதாகும்.

வெஸ்ட் பேங்க்

இந்தத் திட்டத்தை பாலஸ்தீனம் நிராகரித்து, அமெரிக்காவின் அறிவிப்பை புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய மேற்கு கடற்கரைப் பகுதி எனப்படும் வெஸ்ட் பேங்க் பகுதியை இஸ்ரேலின் அங்கமாக அமெரிக்கா அறிவிக்கும் என நம்புவதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

தங்களது நியாமான கோரிக்கை ஒரு சில மாதங்களில் அமெரிக்காவால் அங்கீகரிக்கப்படும் என நம்புவதாகவும் இஸ்ரேல் மக்களின் நீண்டநாள் கனவு இதன்மூலம் நிறைவேறும் எனவும் நெதன்யாகு நம்பிக்கை கூறியுள்ளார்.

இதையும் படிங்க:சவுதியில் சிறார்களுக்கு விதிக்கப்படும் மரண தண்டனை ரத்து!

ABOUT THE AUTHOR

...view details