தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ரஷ்யா - சீனா உறவில் பிளவு? - மக்கள் விடுதலை ராணுவத்தின் எதிர்ப்பு

மாஸ்கோ: இந்தியாவுடனான ராணுவ மோதல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக சீனாவுக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்புகளுக்கு மத்தியில், ரஷ்யா - சீனா உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ரஷ்ய-சீனா உறவில் பிளவா?
ரஷ்ய-சீனா உறவில் பிளவா?

By

Published : Jul 31, 2020, 9:12 AM IST

400 கிலோமீட்டர் தூரத்திலும் 30 கிலோமீட்டர் உயரத்திலும் இலக்குகளை அழிக்கும் திறன் கொண்ட எஸ் -400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அதிகளவில் உருவாக்குவதில் திறன்கொண்ட நாடாக ரஷ்யா விளங்குகிறது. இந்த ஏவுகணைகளை தயார் செய்து கொடுக்குமாறு ரஷ்யாவிடம், சீனா மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 2018ஆம் ஆண்டில் சீனா எஸ் -400 ஏவுகணையின் முதல் தொகுதியை பெற்றது என்று ராணுவ-ராஜதந்திர வட்டாரம் ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

"இந்த ஆயுதங்களை வழங்குவதற்கான பணிகள் மிகவும் சிக்கலானவை என்று ரஷ்யா தரப்பில் கூறப்படுகிறது. பயிற்சிக்கு பணியாளர்களை சீனா அனுப்ப வேண்டிய அதே வேளையில், ரஷ்யாவும் ஆயுதங்களை சேவையில் சேர்ப்பதற்கு ஏராளமான தொழில்நுட்ப பணியாளர்களை அனுப்ப வேண்டும்" என்று தலைமை அலுவலர் சோஹு கூறினார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ராணுவ மோதலுக்கு மத்தியில், பல வல்லுநர்கள் இந்த நடவடிக்கை சீனாவுக்கு எதிராக கருதப்படலாம் என்று நம்புகின்றனர்.

பெய்ஜிங் மற்றும் மாஸ்கோவுக்கு இடையிலான உறவுகளில் விரிசல் தோன்ற தொடங்கியுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில், ரஷ்யா தனது முன்னணி ஆர்க்டிக் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் தேச துரோகம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியது. அவர் சீனாவிற்கு முக்கியமான தகவல்களை வழங்கியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆர்க்டிக் ஆராய்ச்சியாளருக்கு எதிரான உளவு குற்றச்சாட்டுகள் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் போட்டியை முன்னிலைப்படுத்தக்கூடும் என்று ரஷ்யா-சீனா உறவுகளின் கண்காணிப்பாளர்கள் நம்புகின்றனர். ரஷ்யா இந்தியாவின் முக்கியமான ராணுவ நட்பு நாடு. கடந்த மாதம், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவுக்கு சென்றபோது, இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

ABOUT THE AUTHOR

...view details