மத்திய கிழக்கு நாடான ஈராக்கின் கிர்குக் நகரில் அமைந்துள்ள அந்நாட்டு ராணுவத்தளம் மீது சமீபத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவோடு செயல்பட்டுவரும் கத்தெய்பு ஹெஸ்பொல்லா (Kataib Hezbollah) என்ற ஆயுதம் ஏந்திய தீவிரவாத இயக்கமே காரணமென குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியது.
இதில், ஐந்து கத்தெய்வு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பேரணியாகச் சென்று அதனைச் சூறையாடினர்.