அரசில் ஊழல் நிறைந்துகிடப்பதாகவும் அதனால் பிரதமர் சாத் ஹரிரி உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் லெபனான் நாட்டில் இரண்டு வாரங்களாகத் தொடர் போராட்டம் நடைபெற்றுவந்தது.
அதைத்தொடர்ந்து லெபனான் பிரதமர் சாத் ஹரிரி, தான் பதவி விலகுவதாக அறிவித்தார். இது குறித்து கூறிய அவர், "என்னால் உங்களிடமிருந்து இதை மறைக்கமுடியாது. என்னுடைய அரசியல் சகாக்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன், லெபனானை முன்னேற்றுவது மட்டுமே நமது தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.