லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி, சக்திவாய்ந்த வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த வெடி விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் பாதித்தும் உள்ளனர். முதலில் சிறிய பட்டாசு சத்தத்துடன் கேட்ட இந்த வெடிப்பு பின், ஆரஞ்சு பிழம்பாய் மாறி, அந்த நகரத்தைப் புரட்டிப் போட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக 16 துறைமுக ஊழியர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து நேற்று (ஆக. 6) செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டின் தேசிய செய்தி நிறுவனம், இந்தச் சம்பவம் குறித்து 18 பேரிடம் விசாரணை நடைபெற்றுவருதாக அரசு ஆணையர், ராணுவ நீதிமன்ற நீதிபதி ஃபாதி அகிகியிடம் தெரிவித்துள்ளார்.