தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 24, 2020, 7:43 PM IST

ETV Bharat / international

அணு ஆயுத திறனை அதிகரிக்க வடகொரியா திட்டம்: ராணுவ அலுவலர்களுடன் கிம் ஆலோசனை

பியொங்யாங்: வடகொரியாவின் அணு ஆயுத திறனை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கைகள் குறித்து, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ராணுவ அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Pyongyang
Pyongyang

கரோனா பெருந்தொற்று உலகைச் சூழ்ந்து வரும் வேளையில், வடகொரிய அதிபர் மாயமாகிவிட்டதாகவும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் அண்மையில் வதந்திகள் பரவத் தொடங்கின.

இதனை உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வந்த வேளையில், திடீரென கடந்த 1ஆம் தேதி விவசாய உரம் உற்பத்தி செய்யும் நிலையத்தைத் தொடங்கி வைக்க, கிம் பொது வெளியில் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், வடகொரிய அணு ஆயுத திறனை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கைகள் வகுப்பது குறித்து, அந்நாட்டு ராணுவ அலுவலர்களுடன் அதிபர் கிம் ஆலோசனை மேற்கொண்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

ராணுவ அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் அதிபர் கிம்

வடகொரியாவின் மத்திய ராணுவக் குழு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில், வேறுபல முக்கியப் பாதுகாப்பு முடிவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : விமானம், ரயில் பயணங்களுக்கான வழிகாட்டுதல்கள்!

ABOUT THE AUTHOR

...view details