தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்கா, இங்கிலாந்து தடுப்பூசிகளுக்குத் தடை - ஈரான் மதகுரு அறிவிப்பு! - ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி

டெஹ்ரான்: அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி தடைவிதித்துள்ளார்.

ஈரான்
ஈரான்

By

Published : Jan 9, 2021, 7:30 PM IST

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும், இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய அந்நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி தடைவிதித்துள்ளார்.

அந்நாட்டில் கரோனா எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால், அவை நம்பகத்தன்மை அற்றவை எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ஈரானிய ரெட் கிரசென்ட் சொசைட்டி அமெரிக்காவின் ஃபைசர் கோவிட்-19 தடுப்பூசிகளின் இறக்குமதி ரத்துசெய்யப்படுவதாக அறிவித்தது.

முன்னதாக, அங்கிருந்து ஒன்றரை லட்சம் தடுப்பூசி டோஸ் இறக்குமதி செய்ய ஈரான் ஒப்பந்தம் செய்திருந்தது. தேவைப்பட்டால், வரும் நாள்களில் கிழக்கு நாடுகளிலிருந்து கரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வோம் என அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details