தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கஷோகி கொலை: சவுதி இளவரசருக்கு எதிராக நம்பத்தகுந்த ஆதாரங்கள் - kashoggi murder

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலையில், அந்நாட்டு இளவரசர் மொஹமத் பின் சல்மானுக்கு தொடர்புள்ளதை உறுதிசெய்யும் பல்வேறு நம்பகத்தகுந்த ஆதாரங்கள் அடங்கிய விசாரணை அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது.

SAUDI

By

Published : Jun 19, 2019, 7:16 PM IST

சவதி அரேபியா நாட்டைச் சேர்ந்த 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. சவுதி அரசு குறித்து பல்வேறு விமர்சனக் கட்டுரைகளை எழுதிவந்த இவர், 2018 அக்டோபர் மாதம், துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார்.

பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தக் கொலைக்கு சவுதி பட்டத்து இளவரசர் மொஹமத் பின் சல்மானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக துருக்கி உள்ளிட்டு நாடுகள் குற்றம்சாட்டின. அதற்கு சவுதி அரசு மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், ஜமாலின் கொலை குறித்து விசாரணை மேற்கொண்ட ஐநா மனித உரிமைகள் ஆர்வலர் அதுகுறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

100 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில், ஜமாலின் கொலைக்கும் சவுதி பட்டத்து இளவரசர் மொஹமத் பின் சல்மானுக்கும் தொடர்பு உள்ளதை உறுதி செய்யும் பல்வேறு ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது முன்கூட்டியே சவுதி அரசிடம் அனுப்பப்பட்டிருந்த போதிலும், இதுவரை அந்நாடு மவுனம் காத்துவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details