மணாமா (பஹ்ரைன்):நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பதவியேற்ற பின்பு தனது கன்னி பயணமாக பக்ரைன் நாட்டுக்கு சென்றுள்ளார்.
இரு நாள்கள் அரசு பயணமாக பக்ரைன் நாட்டுக்கு சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (நவ.24) அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர். அப்துல்லாதிப் பின் ராஷித் அல் ஸயானி யை சந்தித்து பேசினார்.
முன்னதாக ஜெய்சங்கருக்கு பக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர். அப்துல்லாதிப் பின் ராஷித் அல் ஸயானி உற்சாக வரவேற்பு அளித்தார்.
பின்னர் இரு நாட்டு அமைச்சர்களும் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஜெய்சங்கர் ட்விட்டரில், “பெருந்தொற்று காலத்தில் சிறப்பு கவனம் எடுத்து கவனித்து கொண்டதற்கு நன்றி. பக்ரைன் அரச குடும்பத்தின் இளவரசர் கலிபா பின் சல்மான் அல் கலிபா மறைவிற்கு இரங்கல் தெரிவித்தேன்.
இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்” என்று தெரிவித்துள்ளார். ஜெய்சங்கர் தனது இருநாள் பயணத்தை முடித்து கொண்டு இன்று (நவ.25) ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.
அங்கு அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஸாயித் அல் நஹ்யான் -னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதையும் படிங்க: ’பாலஸ்தீனத்திற்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் உண்டு’ - அமைச்சர் ஜெய்சங்கர்