மத்திய கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்துக்கு இடையே உள்ள இஸ்ரேலில் அரசியல் ஸ்திரத்தன்மை கடந்த 10 மாதங்களாக ஆட்டம் கண்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு மீது ஊழல் புகார் எழுந்து அவர் குற்றவாளி என தீர்ப்பு வந்தது. இதைத்தொடர்ந்து நெதன்யாகு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்க, இந்தத் தீர்ப்பு தொடர்பாக நெதன்யாகு மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், அங்கு தொடர்ச்சியாக நடைபெற்ற தேர்தலில் இரு கட்சியனருக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, இரு தரப்பும் ஆட்சியமைக்க முடியாமல் தவித்துவருகிறது. இதைத் தொடர்ந்து, ஓராண்டுக்குள் மூன்றாவது முறையக இஸ்ரேலில் தேர்தல் நடைபெறுகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இம்முறையாவது அங்கு ஸ்திரமான ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.