அமைதிக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. முதன்முதலில் 1901ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி டுனான்ட் என்பவருக்கு, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு அவர் ஆற்றிய சேவையை கவுரவிக்கும் விதமாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மார்ட்டின் லூதர் கிங், அன்னை தெரசா, மலாலா உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் அடுத்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
தங்கள் நாடுகளுக்கு இடையே ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதில் பங்களித்ததற்காக இருவரும் அமைதிக்கான நோபர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை இஸ்ரேல் பிரதமர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது.