தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நள்ளிரவில் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்! - பாலஸ்தீன போராளிகள் ராக்கெட் தாக்குதல்

ஜெருசலேம்: நள்ளிரவில் இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ocrocroc
ocroc

By

Published : Nov 22, 2020, 1:22 PM IST

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசாமுனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது

அந்த வகையில், நேற்று இரவு இஸ்ரேல் நோக்கி பாலஸ்தீன போராளிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக ராக்கெட் திறந்த பகுதியில் விழுந்ததால் யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக ராணுவம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

ABOUT THE AUTHOR

...view details