தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

லெபனான் - சிரியா இடையே பதற்றம்... இஸ்ரேல் ராணுவ தளபதி எல்லையில் ஆய்வு! - வடக்கு எல்லையில் இஸ்ரேல் தளபதி ஆய்வு

ஜெருசலேம்: லெபனான்- சிரியா பகுதிகள் இடையே பதற்றம் நிலவி வருகிறதை தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவ தளபதி நாட்டின் வடக்கு எல்லையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ல்லை
ல்லை

By

Published : Jul 26, 2020, 5:17 PM IST

இஸ்ரேல் நாட்டின் ராணுவ தளபதி அவிவ் கோஹாவி, நாட்டின் வடக்கு எல்லையில் திடீரென்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், ராணுவ வீரர்களிடம், அலுவலர்களிடம் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில், "லெபனான்- சிரியா இடையிலான மோதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலிருந்த கோலன் ஹைட்ஸ் தாக்கப்பட்டதில் சேதம் அடைந்துள்ளது. இதையடுத்து, சிரியா ராணுவ படை மீது ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டே வடக்கு எல்யையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சிரியாவில் தனது போராளிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுப்பதாக லெபனான் போராளி குழுவினர் ஹெஸ்பொல்லா உறுதிமொழி எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, வடக்கு எல்லையில் இஸ்ரேலின் காலாட்படை நிறுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details