சர்வதேச நண்பர்கள் தினத்தை முன்னிட்டு பலர்தங்களது நண்பர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் நண்பர் தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது இந்திய மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
நண்பர்கள் தினத்தில் மோடி - நேதன்யாகு புகைப்படத்துடன் இணைந்த ஷோலே பாடல்..! - Israel greets India on Friendship Day
டெல்லி: நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வீடியோவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி - இஸ்ரேல் பிரதமர்நேதன்யாகு இருவரும் இருக்கும் புகைப்படங்களோடு ஷோலே படத்தில் இடம்பெற்ற 'யே தோஸ்தி ஹம் நஹி தோடங்கே' பாடலின் பின்னணி இசை இடம்பெற்றிருப்பது வரவேற்பை பெற்றுவருகிறது. அதோடு இருநாடுகளிடையிலான நட்பு பன்மடங்கு உயரத்தை தொடட்டும் என பதிவிடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னதாக இஸ்ரேலில் வைக்கப்பட்டிருந்த ஒரு தேர்தல் விளம்பர பேனரில் மோடியுடன் நேதன்யாகு இடம்பெற்றிருந்தது இணையதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.