இஸ்ரேல் நாட்டின் நீண்டகாலமாகப் பிரதமராக இருந்துவரும் பெஞ்சமின் நெதன்யாகு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கடந்தாண்டு முதல் எழுப்பப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் இஸ்ரேலில் நடைபெற்ற பிரதமர் தேர்தலில் நெதன்யாகு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், உறுதியான ஆட்சியமைக்க முடியாமல் பிரதமர் பதவியில் மட்டும் நீடித்து வருகிறார்.
தற்போது நெதன்யாகுக்கு மேலும் ஒரு சோதனையாக அவர் மீதான ஊழல் புகார் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நெதன்யாகு மூன்று முறை லஞ்சம் வாங்கியதாகவும், அரசு பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அந்நாட்டு அரசின் தலைமை வழக்கறிஞரான அவிசாய் மன்தெல்பிலிட் வழக்குப்பதிவு செய்துள்ளார்.