ஈரான் - அமெரிக்கா நாடுகளுக்கு இடையே அணு சக்தி ஒப்பந்தம் ரத்தானதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரியில் அமெரிக்க படை நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார்.
இதையடுத்து, ஈரோன் அரசு செயற்கைகோளை விண்ணில் செலுத்த வேண்டும் என தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்தது. அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், தற்போது ஈரானின் முதல் ராணுவ செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.