தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறவுள்ளோம்: ஈரான் அதிபர்

தெஹ்ரான்: "ஈரான் அணுசக்தி" ஒப்பந்தத்தில் இருந்து மீறவுள்ளதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

hassan rouhani

By

Published : Jul 4, 2019, 7:56 AM IST

ஈரானின் அணுசக்தி லட்சியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் 'ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்தன.

ஆனால், ஒப்பந்தத்தை மீறும் வகையில் ஈரான் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த ஒப்பந்தத்தில் இருந்து தங்கள் நாடு விலகுவதாக 2018ஆம் ஆண்டு அறிவித்தார்.

தொடர்ந்து, ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது அமெரிக்கா. இதனிடையே, ஈரானுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அந்நாட்டிடமிருந்து எண்ணை வாங்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அளித்திருந்த தற்காலிக அனுமதியை திரும்பப் பெறுவதாக ட்ரம்ப் அறிவித்தார்.

இதனால், ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஈரானுக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்தியது. இதையடுத்து, அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து மீறவுள்ளதாக ஈரான் அதிபர் ஹசான் ரவ்ஹானி அறிவித்திருந்தார்.

மேலும், கடந்த திங்கள்கிழமையன்று அணுசக்தி ஒப்பந்தத்தை மீறும் வகையில் 300 கிலோவுக்கும் அதிகமாக Low Enriched யுரேனியத்தை சேமித்தாக ஈரான் ஊடகங்களில் செய்தி வெளியாகின. இதற்கு அமெரிக்க கடும் கண்டன் தெரிவித்து.

வரும் நாட்களில் ஈரான் மேலும் சக்திவாயந்த யுரேனியத்தை அதிக அளவில் சேமிக்கவுள்ளதாகவும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து ஈரானை மீட்க, ஐரோப்பிய நாடுகளில் நடவடிக்கை எடுக்காததால் இந்த முடிவை எடுத்ததாக் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details