வளைகுடா நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் கடத்தியதாகக் கூறி, ஈரான் அரசு மற்றொரு வெளிநாட்டுக் கப்பலை இன்று கைப்பற்றியது. அரபு நாடுகளுக்காக இந்தக் கப்பலில் கச்சா எண்ணெய் கடத்தப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு கச்சா எண்ணெய் கப்பலை கைப்பற்றிய ஈரான்! - britain
தெஹ்ரான்: ஈரானிலிருந்து சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் கடத்தியதாகக் கூறி மற்றொரு கப்பலை அந்நாடு கைப்பற்றியுள்ளது.
மேலும், முறையான அரசு அனுமதியுடனேயே இந்த நடவடிக்கை ஃபார்ஸி தீவு அருகே மேற்கொள்ளப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கப்பல் ஈராக்கிலுள்ள புஷேர் துறைமுகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அக்கப்பலிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 70,000 லிட்டர் கச்சா எண்ணெய் துறைமுக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, பிரிட்டன் கொடியுடன் சென்ற ஒரு கப்பலையும் ஈரான் அரசு இதேபோல கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஈரானின் இந்தச் செயலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.