ஈரான் அணு ஆயுத விவகாரத்தால், அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இது குறித்து ஈரான் அதிபர் ஹாசன் ரவ்ஹானி அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் பேசினார்.
'அமெரிக்காவுக்கு அடிபணியமாட்டோம்' ஈரான் திட்டவட்டம் - ஈரான் திட்டவட்டம்
தெஹ்ரான்: அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், அந்நாட்டுக்கு அடிபணியமாட்டோம் என ஈரான் அதிபர் ஹாசன் ரவ்ஹானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
rouhani
அதில், "ஈரான் மீது அமெரிக்கா கடும் பொருளாதார தடைகள் விதித்து ஒரு வாரம் கழிந்துள்ள நிலையில், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு நம் நாட்டு மக்கள் அடிபணியவில்லை.
நம் நாட்டின் மீது அவர்கள் குண்டுபோட்டு நம் குழந்தைகள் இறந்தாலோ, காயமடைந்தாலோ, கைது செய்யப்பட்டாலோ நம் சுதந்திரம் மற்றும் பெருமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது" என பேசியுள்ளார்.