கோவிட் 19 வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது சீனாவில் குறைந்துவந்தாலும், மற்ற நாடுகளில் இந்த வைரஸ் தொற்றால் நாளுக்கு நாள் பலர் உயிரிழந்து வருகிறன்றனர். குறிப்பாக இத்தாலி, அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாகவுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் திகழ்கிறது. அந்நாட்டிலுள்ள முக்கிய தலைவர்கள் பலரும் இந்த வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், நாட்டின் உட்சபச்ச தலைவரையே பதவி நீக்கும் அதிகாரம் கொண்ட நாடளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கோவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.