ஈரான் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில், அமெரிக்கா-ஈரான் நாடுகள் இடையே மோதல் வலுத்துவருகிறது. இந்த நிலையில், ஈரான் வான் எல்லைக்குட்பட்ட கொஹ்மோபாராகில் ( Kouhmobarak) பறந்துசென்ற அமெரிக்க ராணுவத்தின் 'நார்த்டுரோப் குரூமேன் ஆர்குயூ-4 குளோபல் ஹாக்' (Northrop Gruman RQ-4 Global Hawak) ரக ஆளில்லா விமானத்தை தாங்கள் சுட்டுவீழ்த்தியதாக, அந்நாட்டின் பாதுகாப்புப் படை பரிவுகளில் ஒன்றான இஸ்லாமிய புரட்சி ராணுவப் படை தெரிவித்துள்ளது.
அமெரிக்க டிரோனை சுட்டுவீழ்த்திய ஈரான்! - northrop gruman rq-4 global hawak
தெஹ்ரான்: ஈரான் வான் எல்லையில் பறந்துசென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்றை தாங்கள் சுட்டுவீழ்த்தியுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
"அமெரிக்காவின் ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. அந்நாட்டுக்கு நாங்கள் அனுப்பும் செய்தி" என்று தெரிவித்த அந்த ராணுவப் படையின் மேஜர் ஜெனரல் ஹுசேன் சலாமி, எந்த நாட்டுடனும் போரிடுவதை ஈரான் விரும்பவில்லை எனவும், ஆனால் தாங்கள் மீது யாரேனும் போர் தொடுத்தால் அவர்களை சமாளிக்க நாங்கள் தாயாராக உள்ளோம் எனவும் கூறினார்.
இதற்கு பதிலளித்த அமெரிக்கா, சுட்டுவீழ்த்தப்பட்டட ஆளில்லா விமானம் சர்வதேச எல்லையில்தான் பறந்ததாக மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரம், ஓமன் வளைகுடாவில் இரண்டு எண்ணைக்கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக காணொளி ஒன்றை வெளியிட்டு அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்த நிலையில், அந்த சம்பவமானது அரங்கேறியுள்ளது. இது மத்திய கிழக்கு நாடுகள் இடையே மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.